இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கெதிரான வழக்கு

கடந்த மாதம் (அக்டோபர்) 31ம் திகதி மிரிஹான பகுதியிலுள்ள லொஹான் ரத்வத்தவின் மனைவியின் வீட்டிலிருந்து இலக்கத் தகடில்லாத மகிழுந்தொன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு நுகேகொட – கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

அதற்கிணங்க இன்று (நவம்பர் 07) சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தற்போது சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த,அவரது மனைவி ஆகியோருக்கு எதிரான வழக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க