நேற்று (நவம்பர் 05) முதல் ஹாலிஎல – வெலிமடை வீதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பதுளை நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு மண்சரிவு நிலைமை பாரதூரமானதாக இருக்கக்கூடுமென்பதால் குறித்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் தன் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எல்.எம்.உதய குமார தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க