இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் புகைப்படத்துடனான போலி நாணயத்தாள்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நபர் கைது

நேற்று முன்தினம் (நவம்பர் 04) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் புகைப்படத்துடன் கூடிய போலி 5000 ரூபா நாணயத்தாள்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதற்கிணங்க கடுவெல – கொரதொட பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்கிணங்க குறித்த சந்தேக நபரை எதிர்வரும் நவம்பர் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க