இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்

அக்டோபர் 25ம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இலங்கையின் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று அல்லது அபாயகரமான பகுதிகள் என பெயரிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் சந்திரிகா ஹேமாலி அபேரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க குறித்த அறிக்கையில் ஆபத்திலுள்ள பன்றிகள், பன்றி இறைச்சி, இறைச்சி தயாரிப்புகள், நோயை உண்டாக்கும் பொருட்களை தொற்று மற்றும் ஆபத்திலுள்ள பகுதிகளின் வௌியே கொண்டு செல்வது, அகற்றுவது, விரட்டுவது என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க