சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு மற்றும் அரிசியின் விலை அதிகரித்தமையால் அரிசி ஆலை உரிமையாளர் வர்த்தகர் டட்லி சிறிசேனவுக்கு சொந்தமான அரலிய அரிசி நிறுவனம் உள்ளிட்ட சில அரிசி ஆலைகளிலுள்ள நெல் கையிருப்பு தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதற்கிணங்க சந்தையிலுள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (அக்டோபர் 28) ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க