புதியவைவணிக செய்திகள்

மரக்கறிகளின் விலைகளில் மாற்றம்

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதான பொருளாதார மத்திய நிலையமான கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கிணங்க ஒரு கிலோ போஞ்சி 330-350 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 180-200 ரூபாவாகவும் ஒரு கிலோ கத்தரிக்காய் 50-60 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட் 70-75 ரூபாவாகவும் ஒரு கிலோ முட்டைக்கோஸ் 50-70 ரூபாவாகவும் ஒரு கிலோ சோளம் 70-80 ரூபாவாகவும் ஒரு வெண்டைக்காய் 120-130 ரூபாவாகவும் ஒரு கிலோ கிழக்கு 60-70 ரூபாவாகவும் கறிமிளகாய் 500-550 ரூபாவாகவும் உள்ளூர் உருளைக்கிழங்கு 180-200 ரூபாவாகவும் முள்ளங்கி 60-70 ரூபாவாகவும் பச்சை மிளகாய் 400 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க