இலங்கையில் இன்று அனைத்து இனங்களும் பீதியுடன் வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சிங்கள மக்கள் தாம் இலக்குகளாக மாறிவிடுவோமா? என்று பயப்படுகிறார்கள்.
முஸ்லிம் மக்கள் தமக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ?என்ற அச்சத்தைக்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தினத்தில், பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ் கிறிஸ்தவ மக்கள், மீண்டும் தம்மீது தாக்குதல்கள் நடத்தப்படக்கூடாது என்றளவில் விழிப்புடன் செயற்படுகின்றனர். 30 வருடக்காலப் போரில் பாதிக்கப்;பட்ட தமிழர்கள், இந்த விடயத்தில் இருதலைக்கொள்ளிகளாக உள்ளனர்.
ஒரே மொழி என்ற அடிப்படையில் முஸ்லிம் மக்களுடன் தமிழர்கள் தொடர்புபட்டுள்ளனர்.
இந்த தொடர்பானது சிங்கள மக்கள் மத்தியில் அதிக பீதியை ஏற்படுத்தக்கூடிய ஒரு காரணமாக இருக்கும். மொழியால் ஒன்றுப்பட்டு மதத்தால் வேறுபட்ட சிங்கள கத்தோலிக்கர்கள் இன்றும் ஒற்றுமையாகவே செயற்படுகின்றனர். இதே நிலைதான் தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த இடத்தில் தமிழர்கள் யதார்த்ததை உணர்ந்து சிந்தித்து செயற்படவேண்டியது எதிர்காலத்தின் அவசியமாக அமைந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஏனெனில் விடுதலைப்போராட்டம் நடைபெற்றபோது இதேநிலைதான் தமிழர்களுக்கும் ஏற்பட்டிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எனினும் அப்போது எவரும் தமிழ் மக்கள் வேறு, போராளிகள் வேறு என்ற அடிப்படையில் தமிழர்களை யாரும் பார்க்கவில்லை.
இந்தநிலையில் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை தமிழர்களுக்கு இன்னும் மறக்கவில்லை. எனவே அவர்கள் தற்போதைய சூழ்நிலையில் வீணே பலிக்கடாவாக்கப்படும் நிலையை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
பாதுகாப்பு விடயங்களைப் பொறுத்தவரையில் அதனைப்பற்றி விமர்சனம் செய்தல், மாற்று இனங்கள் பற்றி விமர்சனம் செய்தல் போன்ற செயல்களில் இருந்து தமிழர்கள் விலகியிருப்பது சாலப்பொருத்தமானது. நடப்புப் பிரச்சினையில் தமிழர்களை பலிக்கடாவாக்கப்படும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில் மற்றவர்களின் பிரச்சனைகளில் வீணே தலையிட்டு பிரச்சiயை விலைக் கொடுத்து வாங்கும் நிலைமையை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது.
இந்தநிலையில் சமூகங்களில் ஏற்படும் சிறுப்பிரச்சனைகளுக்காக அறிக்கைகளை வெளியிடும் செயற்பாடுகளை அரசியல்வாதிகள் கைவிடவேண்டும்.
கருத்து தெரிவிக்க