நேற்று (செப்டம்பர் 26) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தில் கொள்கை வட்டி விகிதங்களை மாற்றமின்றி தொடர்ந்து ஒரே மட்டத்தில் பேண இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதற்கிணங்க துணை நில் வைப்பு வசதி விகிதம் 8.25 சதவீதமாகத் தொடர்ந்து பேணப்படவுள்ளதுடன் துணைநில் கடன் வசதி விகிதம் 9.25 சதவீதமாக மாற்றமின்றி பேணப்படவுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க