கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் கடிதமொன்றினை அனுப்பி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த கடிதத்தில் மக்களுக்கு விரும்பத்தக்க பலன்களை வழங்கக்கூடிய விவேகமான வளர்ச்சி உத்திகளை உருவாக்குவதில் புதிய ஜனாதிபதி அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாகவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க