நேற்று (செப்டம்பர் 12) ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலுள்ள மாளிகையில் வைத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் பரஸ்பர நலன்சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க