அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற பட்டத்திருவிழாவில் கலந்துக்கொண்ட வானிலை மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன பட்டங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்காவில் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட இலங்கையிலுள்ள நுவரெலியாவில் இந்த நோக்கத்திற்காக பட்டங்களை பயன்படுத்துவது ஒரு புதிய முயற்சியாகுமென பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு இத்திட்டத்தினூடாக 500 மீற்றருக்கு மேல் உயரத்தில் பறக்கும் பட்டங்களை பயன்படுத்தி 1800 டெராவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க