உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நடுவானில் விமான அதிர்வு

போயிங் 737-900 என்ற நிறுவனத்திற்கு சொந்தமான யு.ஏ-1196 விமானம் 179 பயணிகளுடன் மெக்சிகோவின் கான்கன் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் சிக்காகோ நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம்  லூசியான நகருக்கருகே வைத்து  திடீரென நடுவானில் அதிர்வுக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க இவ்வவசர நிலையை கருத்தில் கொண்டு குறித்த விமானம் டென்னசி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வதிர்வின் காரணமாக விமானத்தில் பயணித்த 07 பயணிகள் காயமடைந்துள்ளதோடு அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனரெனவும் மேலும் விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் கவனமாக மீட்கப்பட்டு வேறொரு விமானம் மூலம் சிக்காகோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க