தாய்லாந்து நீதிபதியொருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான சட்டதரணியொருவரை அமைச்சரவை அமைச்சராக நியமித்ததன் காரணமாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவியிலிருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டதற்கமைய ஸ்ரெத்தா தவிசின் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து நேற்று (ஓகஸ்ட் 16) புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.அவ்வாக்கெடுப்பில் முன்னாள் நீதித்துறை மந்திரி சாய்காசெம் நிதிசிரி மற்றும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய புதல்வி பேடோங்டர்ன் ஷினவர்தா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று 37 வயதுடைய இளம் பெண்ணான முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய புதல்வி பேடோங்டர்ன் ஷினவர்தா புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அத்தோடு தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணெனும் பெருமையையும் பேடோங்டர்ன் ஷினவர்தா பெற்றுள்ளார்.
கருத்து தெரிவிக்க