உலகம்

அமெரிக்காவில் பொலிசாரால் உயிரிழந்த கறுப்பின இளைஞருக்கு ஆதரவாக இலண்டன் மக்கள் !

அமெரிக்காவில் காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்ய முற்பட்ட கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் , கைதுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் பொலிசார் ஒருவர் தனது முழங்காலால் கழுத்தை நெரித்து கொன்றதில் , அந்நாட்டில் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பையும் ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்து , சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பொலிசாரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் முக்கியமாக சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ட்ரெக் சோவென் என்பவருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இச் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்களும் கலவரங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதற்கு அமெரிக்க இராணுவம் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் தெற்கு இலண்டன் வீதிகளில் இன்று ஜோர்ஜ் இற்கு ஆதரவாக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் , ஜோர்ஜ் இற்கு நேர்ந்தது தங்களுக்கு நேரிடலாம் எனவும் , இந்த விடயத்தில் பிரித்தானியா ஒன்றும் அப்பாவி அல்ல எனவும் , பாதாகைகளில் குறிப்பிட்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க