இன்று (ஓகஸ்ட் 05) இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரும் பங்களாதேஷ் கிரிக்கெட் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றி வரும் ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பு பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
அத்தோடு ஹஷான் திலகரத்னவின் பாரியாரும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்பாட்டாளராக கடமையாற்றி வரும் அப்சாரி சிங்கபாகு திலகரத்னவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
கருத்து தெரிவிக்க