ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளது.
அதற்கிணங்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த பின்னர் அனைத்து வேட்பாளர்களுக்கும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.வியானி குணதிலக்க தெரிவித்தார்.
மேலும் பொலிஸ் மா அதிபருடனான பிரச்சனை காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபரின் அனைத்து அதிகாரங்களையும் செயலாளர் திரு. வியானி குணதிலக்கவிடம் பொது பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளதெனவும்
தேர்தல் காலத்தில் பொலிஸ் மா அதிபர் பிறப்பிக்கும் உத்தரவுகள்,தேர்தல் கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துதல், கூட்டங்களை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்தல், போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தேவையான பணம் செலுத்துதல் போன்றவை செயலாளரால் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க