இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

டெங்கு குறித்து தேசிய டெங்கு நோய் தடுப்புப்பிரிவு கருத்து

டெங்கு நோய் நிலை குறித்து தேசிய டெங்கு நோய் தடுப்புப்பிரிவு தற்போது தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க இலங்கையில் டெங்கு நோயின் தாக்கமானது அதிகரித்து வருவதாகவும் மாகாண, மாவட்ட ரீதியில் பலர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜனவரி முதல் இன்று வரை டெங்கு நோயால் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 31,480 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அவற்றுள் மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் 39.5 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மாவட்ட ரீதியில் கொழும்பில் 23.5 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனரென தேசிய டெங்கு நோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க