புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

2024 லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை தன்வசப்படுத்திய ஜப்னா கிங்ஸ் அணி

நேற்று (ஜூலை 21) கொழும்பு கெத்தாராம சர்வதேச மைதானத்தில் கோல் மார்வெல்ஸ் அணியை எதிர்த்து ஜப்னா கிங்ஸ் அணி களமிறங்கியிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் மார்வெல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடிட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.

அதையடுத்து 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணி 15.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

அதற்கிணங்க 2024 லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை ஜப்னா கிங்ஸ் அணி தன்வசப்படுத்திக்கொண்டது.

கருத்து தெரிவிக்க