நேற்று(ஜூலை 15) முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின் பத்தாம் நாள் அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி குறித்து முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ கருத்து தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு நேற்று துப்பாக்கிச் சன்னம் மற்றும் சிறப்புக் கோர்வையும் சான்றுப்பொருட்களாக மீட்க்கப்பட்டுள்ளதோடு அடுத்துவரும் நாட்களில் இந்த புதைகுழி தொடர்பான சில நீதிமன்ற நடவடிக்கைகள் தொடருமென முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.
மேலும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர்
தடயவியல் பொலிசார், உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் பத்தாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது .
கருத்து தெரிவிக்க