புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

பாகிஸ்தானின் முன்னாள் ஆல்-ரவுண்டர் காலமானார்

டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுக இன்னிங்சிலேயே சதம் அடித்த சாதனையாளரும் பாகிஸ்தான் கிரிக்கெடின் ஆல் -ரவுண்டருமான பில்லி இபதுல்லா நேற்று (ஜூலை 14) தனது 88வது வயதில் காலமானார்.

இவர் 1964ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 166 ரன்களை குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரது மறைவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்து இரங்கல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க