சினிமாபுதியவை

விஜயகாந்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார் நெப்போலியன்!

கடந்த டிசம்பர் 28ஆம் திகதி நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில், வர முடியாத சூழ்நிலையில் அமெரிக்காவில் இருந்த நடிகரும், விஜயகாந்தின் நண்பருமான நெப்போலியன் தற்போது இந்தியா வந்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு நடிகர் நெப்போலியன் தனது மனைவியுடன் நேற்று (09) சென்று விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க