இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

பதவி உயர்வு வழங்காமை மற்றும் வேதன அதிகரிப்பின்மை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்த புகையிரத நிலைய அதிபர் சங்கம் நேற்று(ஜூலை 09) நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயக்கவிருக்கும் அனைத்து புகையிரதங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

அதற்கிணங்க இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று (ஜூலை 10) புகையிரத பருவகால பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பருவகால பயணச்சீட்டை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு தேவையான வசதிகளை போக்குவரத்து அமைச்சு வழங்கியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு இன்று (ஜூலை 10) இயக்க திட்டமிடப்பட்டுள்ள பல அலுவலக புகையிரதங்களை இயக்குவதற்கு தேவையான அதிகாரிகளை பணியமர்த்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க