லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இணையும் அணிகளின் வீரர்களின் ஒழுக்கம் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தும் வகையில் LPL போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் தற்போது ஆடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கண்டி பெல்கன்ஸ் அணியின் தலைவர் வசந்து ஹசரங்க மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு அபராதம் விதிக்க LPL ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜூலை 2ம் திகதி கண்டி பெல்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்களின் ஆலோசனைகளை மீறியமையால் இந்த அபராதம் எடுக்கப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளது.
அதற்கிணங்க வனிந்துவுக்கு போட்டி பணத்தில் 25 சதவீதமும் பினுரவுக்கு போட்டி பணத்தில் 20 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முறையே இவ்வபராதமானது கண்டி பெல்கன்ஸ் அணி அல்லாத தலைக்கவசம் அணிந்திருந்தமைக்காக தலைவர் வனிந்து ஹசரங்கவிற்கும்
இதே சட்டத்தை மீறியதற்காக கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இவ்வபராத தொகை இலங்கை ரூபாய்க்கு 11 இலட்சமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க