இன்று (ஜூலை 04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.
அதற்கிணங்க சி.வி.விக்னேஸ்வரன் தேர்தலை பிற்போட வேண்டும் என கூறியிருந்ததோடு தேசிய அரசாங்கம் அமைப்பது நாட்டிற்கு பொருத்தமானதென்றாலும் தமிழ் கட்சிகள் தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு பொருத்தமில்லாதது என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தற்போது தேர்தல் நடைபெற்ற குறுகிய காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பாரிய சிக்கல் ஏற்படுவதோடு பொருளாதார நெருக்கடியும் ஏற்படலாமென குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்க வேண்டியிருப்பதால் தேர்தலை பிற்போட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க