உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

‘ சட்டத்தை கையிலெடுக்காதீர்’ – ரணில், மஹிந்த கூட்டாக கோரிக்கை

” சட்டம், ஒழுங்கைமீறும் வகையில் எவரும் செயற்படக்கூடாது.” என்று நாட்டு மக்களிடம் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதற்றத்தை தணித்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறுகோரி –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் இன்று விசேட அறிவிப்புகளை விடுத்தனர்.

இதன்படி ” நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, அதை குழப்பும் வகையில் எவரும் செயற்படக்கூடாது.  அவ்வாறு செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்று பிரதமர் தெரிவித்தார்.

அதேபோல், ” நாட்டு மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது. அதே தவறை நாமும் இழைக்ககூடாது. எனவே,   சட்டத்தை கையிலெடுத்து செயற்படவேண்டாம் என நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். எமது ஆட்சியின்கீழ் இவற்றுக்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கூறினார்.

கருத்து தெரிவிக்க