உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் தெற்கு ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்டவர் ஆர்கன்சாஸின் நியூ எடின்பர்க் பகுதியைச் சேர்ந்த 44 வயதான டிராவிஸ் யூஜின் போஸி என தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்தோடு பதிலுக்கு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் காயமடைந்துள்ளாரென ஆர்கன்சாஸ் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க