சினிமாபுதியவை

கவினின் மாஸ்க் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

கவினின் ‘மாஸ்க்’ திரைப்படம் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனம் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக விகர்ணன் அசோக் அறிமுகம் ஆகிறார். இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது.

படப்பிடிப்பு நேற்று (12) முதல் சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டையில் தொடங்கியுள்ளது.
கவின் கதாநாயகனாக நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கருத்து தெரிவிக்க