சினிமாசினிமாபுதியவை

குட் பேட் அக்லி படத்தில் இணையும் தெலுங்கு நடிகர்

ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இப்படத்தில் தற்போது பிரபல தெலுங்கு நடிகரொருவர் இணைந்துள்ளாரென குட் பேட் அக்லி படக்குழுவினர் தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.

அதற்கிணங்க தெலுங்கு திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த சுனில் என்பவரே நடிகர் அஜித் குமாருடன் குட் பேட் அக்லி படத்தில் இணையவுள்ளாரென கூறப்படுகின்றது.
மேலும் நடிகர் சுனில் தமிழில் மாவீரன்,ஜெயிலர்,மார்க் ஆண்டனி படங்களிலும் நடித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க