கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு இம்மாதத்தின் கடந்த 11 நாட்களுக்குள் மாத்திரம் 971 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு நாடளாவிய ரீதியில் இதுவரை 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும் நாடளாவிய ரீதியில் 14 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 09 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க