உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்

தஜிகிஸ்தானில் நேற்று (மே24) திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.6 ரிக்டராக பதிவாகியுள்ளது.

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு வீடுகள் இடிந்து பலர் வீடுகளை இழந்து வருகின்றனர். அத்துடன் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தஜிகிஸ்தானில் நேற்றைய தினமும் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ரிக்டராக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளதோடு கோரக் அருகே 120 கிலோ மீட்டர் ஆழந்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க