சினிமாசினிமாபுதியவை

அரண்மனை பாகம் 4 ல் நடிக்க கோடியில் சம்பளம் வாங்கிய தமன்னா

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை பாகம் 4 கடந்த மே 3ம் திகதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
இந்த படத்தில் தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா,யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதுவரை அரண்மனை பாகம் 4 திரைப்படமானது ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அரண்மனை பாகம் 4ல் நடிப்பதற்கு தமன்னா வாங்கிய சம்பளம் தொடர்பான தகவலும் அண்மையில் வெளியாகியிருந்தது. அதற்கிணங்க தமன்னா அரண்மனை பாகம் 4ல் நடிப்பதற்காக ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றிருக்கிறார் என தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க