உலகம்வெளிநாட்டு செய்திகள்

அரச குடும்பத்தை சேர்ந்த இளம் வயது “ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான்” மரணம்

கடந்த 2019ல் மறைந்த ஷேக் சுல்தான் பின் சையத் அல் நஹ்யானின் மகனான அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் கடந்த (மே 09) வியாழன் அன்று காலமானதாக ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இவர் அமீரகத்தின் தற்போதைய ஜனாதிபதியான ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானின் பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவிற்கு தற்போது உலகத்தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க