புதியவைவிளையாட்டு செய்திகள்

இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் டுனித் வெல்லலாகே!

டுனித் வெல்லலாகே இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளார்.
டுனித் வெல்லலாகே இருபதுக்கு இருபது சர்வதேசப் போட்டிகளில் இதுவரையில் விளையாடவில்லை என்பதுடன்
கமிந்து மென்டிஸ், நுவான் துஷார, தனஞ்சய டி சில்வா ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

குழாமின் அணித்தலைவராக வனிடு ஹசரங்க,
உப அணித்தலைவராக சரித் அசலங்கவும்,
குசல் மென்டிஸ், பதும் நிஸங்க, கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்கிரம, அஞ்சலோ மத்தியூஸ், தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, மகேஷ் தீக்‌ஷன, டுனித் வெல்லலாகே, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண, நுவான் துஷார, டில்ஷான் மதுஷங்க போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலதிக வீரர்களாக அசித பெர்ணாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்‌ஷ, ஜனித் லியனகே ஆகியோரும் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க