இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

2024 மார்ச் மாதத்தில் நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு அதிகரிப்பு!!

2024 பெப்ரவரி மாத இறுதியில் 4.52 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு, 2024 மார்ச் மாத இறுதியில் 4.95 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு மார்ச் மாதத்தில் 9.6% அதிகரித்துள்ளது.

இதன்போது, 2024 பிப்ரவரி மாத இறுதியில், 4.48 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட அந்நியச் செலாவணி கையிருப்பு 2024 மார்ச் மாத இறுதியில் 4.91 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், 2024 மார்ச் மாதத்தில், மத்திய வங்கியின் தங்கம் கையிருப்பு 31 மில்லியன் டொலர்களிலிருந்து 34 மில்லியன் டொலர்களாக 9.1% ஆல் அதிகரித்துள்ளதுடன் இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க