நேற்று(27.03) சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தனவை பெய்ஜிங்கில் சந்தித்த போது இலங்கையின் சுயாதீனத்தன்மை, ஒருமைப்பாடு, இறைமையின் பாதுகாப்பிற்காக சீனா எப்போதும் முன்னிற்கும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi jinping) தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் நட்புறவு, அமைதி, பரஸ்பர மரியாதை உள்ளிட்ட கொள்கைகளின் கீழ் தொடர்ந்து செயற்பட இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான திட்டங்களை முன்வைக்கும் பட்சத்தில், அதற்கு சீனாவின் ஆதரவு வழங்கப்படும் என சீன ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க