நேற்று (06.03) நடைபெற்ற ஜனாதிபதி ஊடக மையத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ
இந்தியா, சீனா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்த நாட்டில் முதலீட்டுக்காக முன்வந்துள்ளன என்று தெரிவித்தார்.
மேலும்,தற்போது பொருளாதாரம் ஓரளவு வலுவான நிலைமைக்கு திரும்புவதால் அவசியமான அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சீன உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு உரிமத்தை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
கருத்து தெரிவிக்க