இலங்கைஉள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் இடையிலான முதலாவது டி 20 போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி!!

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்கிரம அதிகபட்சமாக 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று,குசல் மெந்திஸ் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்களுடன் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில், Rishad Hossain , Taskin Ahmed மற்றும் Shoriful Islam ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய Jaker Ali 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் Mahmudullah 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க