60 முதல் 80 வரையில் இருந்த தேங்காயின் வழமையான விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஒரு தேங்காய் தற்போது ரூ.120 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதிகரித்துள்ள தேங்காய் விலையின் கீழ் சோறு மற்றும் கறி சாப்பாடு பொதிகளை தயார் செய்ய முடியாமல் சிற்றுண்டி மற்றும் உணவக உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இதனால் உணவுப் பொதிகளை அதிக விலைக்கு விற்க வேண்டிய நிச்சயமற்ற சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தேங்காய்களின் திடீர் அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் தேங்காய் எண்ணெயின் விலையும் உயரும் என ஹர்ஷன எச்சரித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க