மின்சார விநியோகம், பெற்றோலியப் பொருட்கள், எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகிப்பதற்கான அனைத்து சேவைகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நேற்று (03.04) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் விநியோகஸ்தர்களின் மாதாந்த தள்ளுபடி பணத்திலிருந்து 35 வீத பாவனை கட்டணத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று முதல் அறவிடப் போவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளதுடன்
விநியோக நடவடிக்கைகளுக்கு அன்றாட செலவுகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்படும் என சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க