கானா பாராளுமன்றத்தில் அதிபர் நானா அகுஃபோ–அட்டோ (Nana Akufo-Addo) நாட்டு மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கிருந்து உறுப்பினர்கள் அனைவரும் அக்கன் (Akan) மொழியில் “மின்சார தடை” எனும் பொருள்பட “டம்சர், டம்சர்” (dumsor, dumsor) என கோஷமிடத் தொடங்கினர்.சில நிமிடங்கள் கடந்ததும், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த சபைக்கு மட்டும் ஜெனரேட்டர் உதவியுடன் மின்சாரம் கிடைத்தது.
பாராளுமன்ற அலுவலகம் செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கியை வசூலிக்க பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டணத்தை செலுத்தாததால், மின் விநியோகத்தை துண்டித்ததாக Electric Company Of Ghana (ECG) எனும் அந்நாட்டு மின்சார நிறுவன செய்தித் தொடர்பாளர் வில்லியம் போடெங் (William Boateng) தெரிவித்துள்ளார்.
மின் தடை என்பது கட்டணம் செலுத்தாத அனைவருக்கும் தான். கட்டணம் செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் மின்சார விநியோகம் துண்டிக்கப்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க