உலகம்சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

சுற்றுப்பாதையை விட்டு விலகிய செயற்கைக் கோள் பூமியில் விழும் அபாயம்

1995ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கிராண்ட்பாதர் (Grandfather) என்ற இந்த செயற்கைக்கோளானது இம்மாத இறுதிக்குள் பூமியில் விழலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஓசோன் படலத்தை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோள், ஆயுட்காலம் முடிவடைந்து தன்னுடைய சுற்றுப்பாதையை விட்டு விலகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கிராண்ட்பாதர் செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாகவும் ஐரோப்பா விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதுடன் விழும் பாகங்களை ஐரோப்பாவில் உள்ள கடல்களில் விழ வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க