இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்ப உறவினர்கள் பாரிய ஊர்வலம்

யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவினர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள ஏழாண்டு கால உண்மையைத் தேடும் வேதனையை நிறைவு செய்யும் வகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்று காலை கிளிநொச்சியில் பாரிய ஊர்வலமொன்றை நடத்தவுள்ளனர். .

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஐந்து கிளைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கிளிநொச்சியில் தங்களின் குறைகளைக் குறிக்கும் வகையில் பேரணியாகச் செல்லவுள்ளனர்.

கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து காலை 9.30 மணியளவில் பிரதான ஊர்வலம் ஆரம்பமாகி நான்கு கிலோமீற்றர் தூரத்தில் டிப்போ சந்தியில் உள்ள சிறப்பு நினைவுச்சின்னம் வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நினைவேந்தலுக்கு வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க