சிறை வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய அதிபரை விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 19-வருட கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு, ரஷ்ய சிறைச்சாலைகளிலேயே மிகவும் மோசமானதாக கருதப்படும் ஆர்க்டிக் பீனல் காலனி (Arctic Penal Colony) எனும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், யமலோ-நெனெட்ஸ் மாவட்ட (Yamalo-Nenets) சிறைச்சாலை அதிகாரிகள், தற்போது 47 வயதாகும் அலெக்ஸி நவால்னி, சிறையில் மயக்கமடைந்ததாகவும், அவசர மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரை காப்பாற்ற போராடியும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அலெக்ஸி நவால்னியின் உயிரிழப்பிற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க