இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை!

இலங்கையின் 76வது சுதந்திர தினவிழா இன்று காலை காலி முகத்திடலில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் “புதிய நாட்டை கட்டி எழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில்  இடம்பெற்றது.

76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளின் கௌரவ அதிதியாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொண்டிருந்தார்.

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் முப்படையினர், பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் கெடட் வீரர்களின் அணிவகுப்புடன் பல கண்கவர் நிகழ்வுகளைக் கொண்டிருந்தது.

சுதந்திர தின வணக்க அணிவகுப்பில் 3461 இலங்கை இராணுவ உறுப்பினர்கள் பங்குபற்றியுள்ளனர்

கவச வாகனங்கள் உட்பட 69 வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

சந்திர தின அணிவகுப்பில் விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் 19 விமானங்கள் இம்முறை வான்வெளியை அலங்கரித்திருந்தது.

ஏழு ஹெலிகாப்டர்கள், ஐந்து எம் ஐ-16 ரக விமானங்கள் மற்றும் மூன்று ஜெட் விமானங்கள் இதில் அடங்கியிருந்தது.

28 கவச வாகனங்களுடன் 85 விமானப்படை அதிகாரிகள் மற்றும் 784 இதர ரேங்க்கள் கொண்ட ஒரு குழு, சுதந்திர தின அணிவகுப்பில் பெருமையுடன் அணிவகுத்துச் செல்லும்.

சுதந்திரக் கொண்டாட்டத்தில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 1009 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.

 

கருத்து தெரிவிக்க