அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் கணக்கில் இந்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.
பெப்ரவரி மாத இறுதியில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற உள்ளதாகவும் அவர் கூறினார்.
2007ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்காட் மோரிசன், 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார்.
2022 இல், அவர் நாடாளுமன்றத்தால் தணிக்கைக்கு உட்பட்டார். அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தால் தணிக்கை செய்யப்பட்ட முதல் பிரதமர் இவர்தான். தொற்றுநோய் சூழ்நிலையில் அவர் ரகசியமாக அமைச்சுப் பதவிகளை வழங்கியதாலேயே இவ்வாறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
‘‘நாட்டின் சவாலான காலக்கட்டத்தில் ஏறக்குறைய நான்கு வருடங்கள் பிரதமராக இருந்துள்ளேன். பதினாறு வருடங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் பணியாற்றியுள்ளேன்.
இப்போது மாற்று தீர்மானங்களை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. அரசியலை விட்டு வெளியேறி எனது தனிப்பட்ட வாழ்வில் மீண்டும் அதிக நேரத்தை செலவிட தீர்மானித்துள்ளேன்.‘‘ எனவும் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க