இந்தியாசமீபத்திய செய்திகள்பண்பாடு

கொல்லிமலை சித்தர் சுவாமிகளின் அருளாசி நிகழ்வு

சித்தர்கள் ஞானபீடம் அறக்கட்டளை மற்றும் பன்னாட்டு கலாசார சர்வசமய ஆய்வுமையம் என்ற அமைப்பின் ஸ்தாபருமான வாழும் கொல்லிமலை சித்தர் சுவாமிகள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக கொடியேற்ற உற்சவத்தில் கலந்துகொண்டு அடியார்களுக்கு அருளாசி வழங்கவுள்ளார்.

குறித்த நிகழ்வானது இன்று (02.02.2024) இடம்பெறவுள்ளதோடு ஆன்மீகமும் பொதுநலத்தொண்டும் சிரமேற கொண்டு வாழ்ந்து வரும் நமது சித்தர் தனது சித்தர் பரம்பரையில் 4வது தலைமுறை சித்தராக வாழ்ந்து வருகிறார்.

பிரபஞ்சத்துள் நாம் பிரபஞ்சமே நாம்தனது பன்னாட்டு கலாசார சர்வசமய ஆய்வுமையத்தின் ஊடாக உலகெங்கும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற கோட்பாட்டுக்கமைய தனது ஆன்மீக உபதேசமான “பிரபஞ்சத்துள் நாம் பிரபஞ்சமே நாம்” என்ற தனது ஆன்மீக கொள்கைளை உணர்த்தும் வகையில் தனது முத்திரையை பதித்து வருகிறார்.

இவரின் நோக்கமே, ஒரே உலகம், ஓரே கடவுள், அனைவரும் ஒருதாய் மக்களாய் வாழவேண்டும் என்பதேயாகும். இமயமலை, கொல்லிமலை, அகத்தியர்மலை, சஞ்சீவி மற்றும் இந்தியாவிலிருந்து பல்வேறு மலைகளிலிருந்து காணகிடைக்காத அரிய சஞ்சீவி மூலிகைகளுடன் இலங்கை வந்திருக்கும் சுவாமிகள் இலங்கை மக்கள் சுபீட்சமாக வாழவும், மனஅமைதி, உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் பெற்று குபேரனாய் வாழவும், ஓவ்வொரு மனிதனின் பிறவி இரகசியத்தை அறிந்து அனைத்து பிரச்சினைகளையும் சஞ்சீவி மூலிகை கொண்டும், யாகத்தின் மூலமும், தீர்வு காண செய்கிறார்.

 

 

கருத்து தெரிவிக்க