நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை உயர்த்த தீர்மானித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 371 ரூபாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 456 ரூபாயாகும். இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க