பெலியத்தவில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நிலையில் காலி வஞ்சாவல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ‘எங்கள் மக்கள் கட்சியின்’ (அபே ஜன பல) தலைவர் சமன் பெரேரா என்ற ரோயல் பீச் சமன் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 35 வயதுடைய காலியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து 09 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின், மோட்டார் சைக்கிள், 3 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கத்தி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸார் முன்னரே கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க