சினிமாசினிமா

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

இளையராஜாவின் மகள் பவதாரிணி (வயது 47)உடல்நலக்குறைவால் காலமானார். இளையராஜாவின் மகளான பவதாரிணி நேற்று மாலை 5.30 மணியளவில் காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.பாரதி படத்தில் மயில் போல, ராமர் அப்துல்லா படத்தில் என்வீட்டு ஜன்னல் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். பாரதி திரைப்படத்தில் ‘மயில் போல’ பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

இன்று நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவும் தற்போது இலங்கையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க