தாய்லாந்து நாட்டின் முவாங் மாவட்டத்தில் தம்போன் சலகாவோ நகரில் சுபான் புரி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்றில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியிலிருந்த நிலையில், நேற்று மாலை திடீரென ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் மாயமாகியுள்ளதுடன், 12 பேர் பெண்கள் மற்றும் 8 பேர் ஆண்கள் என பலியானவர்களில் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெடிவிபத்து நடந்ததில், 100 மீட்டர் தொலைவுக்கு பொருட்கள் வீசியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் விபத்து குறித்து, தாய்லாந்து பிரதமர் ஷ்ரெத்தா தவிசின், விரைந்து விசாரணை நடத்தும்படி தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
கருத்து தெரிவிக்க